அன்றொரு நாள் தேநீர் விடுதியில்
காலைப்பத்திரிக்கையை மேய்ந்து
கொண்டிருக்கயில் வெளியாயிருந்த
புகைப்படம் எனதாயிருந்தது
பேரும் எனதாயிருந்தது
புகைபடத்துக்கு மேலே இருந்தது
அறிவித்து கொண்டிருந்தது நான்
காணாமல் போனவன் என்று
அந்த நொடியில் இருந்து தேடிக்கொண்டே
இருக்கிறேன் நான் காணாமல் போன என்னை
உங்களில் யாராவது ஒருவரிடம்
சில நொடிகாளாவது நான் பேசியிருக்க கூடும்
தயவு செய்து என்னை எங்காவது
கண்டால் சொல்லிபோங்கள் நான் யாரென்று.

அன்பன்,

இராமசாமி கண்ணன்.

Followers

Powered by Blogger.